மாதவன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் 'யாவரும் நலம்'. பிரபலமான தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜியும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான அட்லாப்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
சிம்பு நடித்த 'அலை' படத்தை இயக்கிய விக்ரம் தான் இந்தப் படத்தின் இயக்குனர். ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம். இசை சங்கர் மகாதேவன் மற்றும் 'தாரே ஜமீன் பர்' படத்தின் இசையமைப்பாளர்களான ஹசன் லாய் ஆகிய மூவரும் சேர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர்.
இந்தியாவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நீத்து சித்ரா மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஏறக்குறைய படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருந்தும், படத்தை பற்றிய செய்தி வெளிவரவிடால் சத்தமில்லாமல் படத்தை முடித்திருக்கின்றனர். பெரிய பட்ஜெட் படம் இவ்வளவு சஸ்பெண்சாக நடந்தாலும், வெளியீட்டுக்கு முன் விளம்பரத்திற்காக பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது.