குட்டிக்கதை சொல்வதில் கெட்டிக்காரர் ரஜினி. புஜ்ஜிகாடு மேட் இன் சென்னை இசை வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை எதுவும் கூறவில்லை. ஆனாலும், இயக்குநர் புரிஜெகன் நாத்தைச் சென்டிமென்டாக டச் செய்தார் சூப்பர் ஸ்டார்.
புஜ்ஜிகாடில் ரஜினி ரசிகராக வருகிறார் பிரபாஸ். தவிர ரஜினியின் நண்பர் மோகன் பாபுவும் படத்தில் நடித்திருக்கிறார். ஆந்திரா கிளப்பில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு படத்தின் நாயகி த்ரிஷாவுடன் ப்ரியாமணியும் வந்திருக்கிறார்.
நடிகர் ராஜ்குமார் தனது மகனை புரிஜெகன் நாத் இயக்கத்தில் அறிமுகப்படுத்தினார். சிரஞ்சீவியின் மகன் அறிமுகமான சிறுத்தா படத்தை இயக்கியதும் புரிஜெகன் நாத்தான்.
இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட ரஜினி, எனக்கொரு மகனிருந்தால் அவனையும் புரிஜெகன் நாத் இயக்கத்தில்தான் அறிமுகப்படுத்தி இருப்பேன் என்றார். ஒரேபோடு! பொலபொலவென்று ஆகிவிட்டார் புரிஜெகன் நாத். இதைவிட வேறு மொழியில் அவரை பாராட்ட முடியுமா என்ன!