தமிழ் சினிமா அதிகம் எதிர்பார்க்கும் டாப் 10 படங்களில் விஷாலின் சத்யம் படமும் ஒன்று.
விஷால் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் படம். இதுவரை வெளிவந்த போலீஸ் படங்களில் இருந்து சத்யம் முற்றிலும் வேறுபட்டு இருக்குமாம். எப்படி? பதில் சொல்லாமல் முறுவலிக்கிறார்கள் பட யூனிட்டில் உள்ளவர்கள்.
தெய்வலட்சுமி என்ற நியூஸ் ரீடராக நயன்தாரா. கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா படத்தின் வில்லன். நடிகர்கள் அளவிற்குத் தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக கிராபிக்ஸ்.
மம்மி, மேட்ரிக்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த கிரேக் மம்மா சத்யம் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார். சத்யம் ஆக்ஷன் படம் இதில் எதற்கு கிராஃபிக்ஸ் என்று தோன்றும்.
உண்மையில் ஆன்ஷன் காட்சிகளில்தான் கிராஃபிக்சை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். போட்ட பட்ஜெட்டைத் தாண்டி அதிக செலவில் உருவாகும் தமிழ்ப்படம் என்ற பெருமையும் சத்யத்திற்குக் கிடைத்துள்ளது.