சுராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
'தலைநகரம்' படம் மூலம் இயக்குநரானவர் சுராஜ். படம் அனைத்து சென்டர்களிலும் லாபத்தை அள்ளியது. அடுத்து 'மருதமலை', ஹீரோ அர்ஜூன். அதுவும் ஹிட்.
சுந்தர் சி புதுமுகம். அர்ஜூனின் சமீபத்திய எந்தப் படமும் ஓடவில்லை. அவர்களை வைத்தே ஹிட் கொடுத்தவர் என்பதால் முன்னணி நடிகர்களுக்கு சுராஜ் மீது ஒரு கண். இதில் முந்திக் கொண்டவர் தனுஷ்.
தனுஷ், தமன்னா நடிக்கும் படிக்காதவன் படத்தை இயக்கிவரும் சுராஜ் அடுத்து கார்த்தியை வைத்துப் படம் இயக்கலாம் என்று பலமான பேச்சு. படத்தைத் தயாரிப்பது பருத்தி வீரனைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன்.
கார்த்தி தற்போது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து வருகிறார். அவர் வருவதற்காகக் கையில் ஸ்கிரிப்டுடன் காத்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
இந்த இரு படங்களும் முடிந்த பிறகு அவர் சுராஜ் இயக்கத்தில் நடிக்கக் கூடும். அதற்கான பேச்சுக்களும் நடந்து வருகின்றன.