Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலாஜி சக்திவேல் - தனியே தன்னந்தனியே!

Advertiesment
பாலாஜி சக்திவேல் - தனியே தன்னந்தனியே!
, புதன், 16 ஏப்ரல் 2008 (19:29 IST)
அடித்துப் பிடித்துப் படம் இயக்குகிறவர்களுக்கு மத்தியில் அமைதியாக இருக்கிறார் பாலாஜி சக்திவேல். இவரது புதிய படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.

பாலாஜி சக்திவேல் அடுத்த மாதவே படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் என சிலர் கிளப்பிவரும் செய்திகளில் உண்மை கடுகளவும் இல்லை. ஸ்கிரிப்டை அவர் இன்னும் தயார் செய்யவில்லை என்பதே உண்மை.

புதிய படத்திலும் புதுமுகங்களே நடிக்கிறார்கள். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் அலுவலகம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது. இதில் தற்போது கார்த்தியை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன.

அமைதியை விரும்பும் பாலாஜி சக்திவேல் அங்கு தனது படத்துக்கான வேலைகளை வைத்துக்கொள்ளாமல் வெளியே வேறு இடம் கேட்டிருக்கிறாராம்.

ஆடம்பரத்துக்காக அல்ல, அமைதிக்காக என்பதுதான் இதில் முக்கியம்.

Share this Story:

Follow Webdunia tamil