த்ரிஷா, பிரபாஸ் நடித்திருக்கும் புதிய தெலுங்குப் படம் புஜ்ஜிகாரு மேட் இன் சென்னை. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இயக்குனர் பூரி ஜெகன்நாத்.
இதன் ஆடியோ வெளியீட்டு விழா வரும் வியாழன் சென்னை ஆந்திரா கிளப்பில் நடக்கிறது. ஆடியோவை வெளியிடுகிறவர் ரஜினிகாந்த்.
பெரிய விழாவுக்கே போக்கு காட்டி வெளிநாடு பறக்கும் ரஜினி, இந்த ஆடியோ விழாவுக்கு வர எப்படி சம்மதித்தார்? காரணம் சிம்பிள். ரஜினியின் நண்பர் மோகன் பாபு இந்தப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார்.
புஜ்ஜிகாரு மேட் இன் சென்னை ஆடியோவை வெளியிட ரஜினி ஒப்புக் கொண்டது, நட்புக்கு கொடுக்கும் மரியாதை!