Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிகளை உசுப்பேற்றும் “வணக்கம்மா”!

காவிகளை உசுப்பேற்றும் “வணக்கம்மா”!
, புதன், 16 ஏப்ரல் 2008 (16:00 IST)
ஒன்றுமில்லாததற்கே உரல் இடிப்பவர்கள் இந்துத்வா க‌ட்‌சி‌யினர். அவர்களுக்கு உரலும் அவலும் ஒன்றாக கிடைத்தால் விடுவார்களா? அப்படியொரு விஷயத்தை (வேண்டுமென்றே) செய்திருக்கிறார் இயக்குனர் ஹரிராம்.

இவர் இயக்கும் வணக்கம்மா படம் நாளை தொடங்குகிறது. அழைப்பிதழில் ராமனும், ஹனுமானும் ஒன்னுக்கு போவதுபோல் புகைப்படம் அச்சிட்டு பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஹரிராமுக்கு இத்தனை தைரியம் அளித்தவர் படத்தின் தயாரிப்பாளர் அன்பு தென்னரசன். இவர் ஒரு கடவுள் மறுப்பாளர்.

பருத்தி வீரன் சரவணன்தான் வணக்கம்மாவுக்கு ஹீரோ. இன்னொரு இளம் ஜோடியும் படத்தில் உண்டு.

ராமன், ஹனுமான் வேஷம் போட்டவர்கள் தண்ணியடிக்கிற காட்சிகளும் படத்தில் உண்டாம். காவிகள் இப்போதே பல்லை நறநறவென கடிக்க ஆரம்பித்துவிட்டதால், தொடக்க நாளிலேயே தொந்தரவுகள் ஆரம்பிக்கலாம்!

எல்லாம் ஒரு விளம்பர யுக்தியப்பா என்றும் சிலர் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil