ரசிகர் மன்றங்களை முதன்முறையாக நற்பணி மன்றங்களாக மாற்றி அமைத்தவர் கமல்.
இன்று அந்த இயக்கம் ஏழைகளுக்கு உதவுவதில், இலவச இருதய அறுவை சிகிச்சையில், இரத்த தானத்தில் முதலிடத்தில் உள்ளது.
புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பவரும் கமல்தான்.
தனது நற்பணி மன்றங்களை கணினிமயமாக்கி இருக்கிறாராம் கமல்ஹாசன். எல்லா மன்றங்களையும் கணினி மூலம் இணைத்து மன்றங்கள் குறித்த புள்ளிவிவரங்களை உடனடியாக அறியும் வசதியை ஏற்படுத்தி உள்ளாராம்.
கமலைப் போலவே தன்னை ஹை டெக்காக மாற்றிக்கொண்டுள்ள இன்னொரு நடிகர் விக்ரம். வரும் 17 ஆம் தேதி விக்ரமிற்குப் பிறந்தநாள். அன்று தனது பெயரில் வெப்சைட் ஒன்றைத் துவங்குகிறார்.
ரசிகர்கள் தன்னைப்பற்றித் தெரிந்துகொள்ளவும், அவர்களுடன் ஆன்லைனில் உரையாடவுமே இந்தப் புதிய ஏற்பாடு.
நடிகை அசின் தனது பெயரில் ஏற்கெனவே வெப்சைட் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.