இதனை நாம் சொல்லவில்லை. இயக்குனர் காளிமுத்து சொல்கிறார்.
அலையடிக்குது படத்தில் இளசுகளின் நாடி நரம்புகளில் குளிரடிக்கும்படி செய்த இயக்குனர் காளிமுத்துவின் புதிய படம், காதல் என்றால் என்ன.
ஹீரோ பிடெக் பட்டத்தாரியான வீரா. ஹீரோவின் ஏற்கனவே நமக்கு அறிமுகமான தியா. வம்புச் சண்டையில் இவரது கவர்ச்சியில் கவிழ்ந்தவர்கள் இன்னும் எழுந்தபாடில்லை. அதற்குள் அதிரடியாக வெளி வருகிறது, காதல் என்றால் என்ன.
சில காதல் பார்த்தாலே பற்றிக் கொள்ளும். தொட்டதும் பற்றிக் கொள்ளும் காதல்கள் சில. இந்தப் படத்தில் முத்தமிட்டதால் காதல் பற்றிக் கொள்கிறது. அதுவும் உதட்டோடு உதடு!
இந்தக் காட்சியில் நடிக்க புதுமுகம் வீரா, வியர்த்து நடுநடுங்க, அவருக்கு ஊக்கம் கொடுத்து முத்தமிட உற்சாகப்படுத்தியவர் தியா தானாம். விளைவு?
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. இதை ஏற்கனவே எதிர்பார்த்தது போல் ஏக குஷியில் இருக்கிறார் காளிமுத்து.