பா.விஜய் கவிஞர் என்ற அடைமொழியிலிருந்து விடுபட்டு, நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் படம், தாய் காவியம்.
சீனாவில் இரண்டுப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதோடு சரி. ஸ்கிரிப்டை சரி செய்யும் வேலையிலேயே பெரும் பொழுதை கழித்து வருகிறார்கள்.
இளைஞன் ஒருவன் சமூகக் கொடுமைகளை வேரறுக்கப் புறப்படும் கதை இது. பா.விஜய்க்கு தேசிய விருது பெற்றுத் தந்த ஒவ்வொரு பூக்களுமே பாடலை தாய் காவியத்தில் பயன்படுத்துகிறார்களாம்.
நல்ல விஷயங்கள் அனைத்தையும் ஒரே படத்தில் கொண்டு வரும் முயற்சியின் ஒருபகுதிதான், தாய் காவியத்தில் இப்பாடல் இடம் பெறுவதற்கான காரணமாம்.
படப்பிடிப்புக்கு எப்போது கிளம்புகிறீர்கள் கவிஞர் சார்?