நாளை நடக்கவிருக்கும் திரையுலகினரின் உண்ணாவிரதத்தை முன்னிட்டு அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளிலும் இரண்டு காட்சிகள் நடக்காது என்று அனைத்துத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் திடீர் முடிவினால் நாளை வெளியாவதாக இருந்த தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி நாளை மறுநாள் - அதாவது சனிக்கிழமை வெளியாகிறது.
அதேநேரம் நாளை வெளியாவதாக இருந்த பசும்பொன் தேவர் வரலாறு ஆவணப்படம் மாற்றமின்றி வருகிறது.