ராடான் நிறுவனத் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் படத்தில் சரத்குமார் நடிக்கிறார். இதில் சரத்குமாருக்கு ஜோடி சினேகா.
இது ஃபிரெஞ்ச் நடிகர் ஷான் ரெனோ நடித்த வாஸபி படத்தின் ரீ-மேக் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் அதிகாரியான ரெனோ தனது மனைவியைத் தேடி ஜப்பான் செல்கிறார். அங்கு தனக்கொரு மகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார். பிறகு எப்படி தனது குடும்பத்துடன் அவர் ஒன்றிணைகிறார் என்பது கதை.
இந்தப் படத்தையே சரத்குமார் நடிப்பில் கே.எஸ். இயக்குவதாகக் கூறப்படுகிறது. சரத்குமார் ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், லண்டன் மற்றம் ஜப்பானில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.