Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'வில் ஸ்மித்' என்கிற விக்கிரமாதித்யன்!

Advertiesment
'வில் ஸ்மித்' என்கிற விக்கிரமாதித்யன்!
, சனி, 29 மார்ச் 2008 (20:14 IST)
தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்ய விருப்பத்தை வெளியிட்டுள்ளார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.

"ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிக்க மீண்டும் முயற்சிக்கிறேன்" என்று திருவாய் மலர்ந்துள்ள ஸ்மித், ஐஸின் திருமணத்துக்கு முன்பு இந்தியா வந்தபோதே அதற்கான முஸ்தீபுகளை செய்து பார்த்தார்.

'கால்ஷீட்' கிடைக்காமல் வெறுங்கையோடு தாயகம் திரும்பிய ஸ்மித்தின் பகீரங்க முயற்சி மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஐஸ்வர்யாவின் அழகையும், நடிப்பையும் மனதார பாராட்டியுள்ள இந்த ஹாலிவுட் நடிகருக்கு ஐஸ் தரப்பில் இருந்து 'பார்க்கலாம்' என்ற ஓற்றை பதில் மட்டுமே கிடைத்திருக்கிறது.

யானைமேல போறவர்கிட்ட சுண்ணாம்பு கேட்டா கிடைக்குமா என்ன?

Share this Story:

Follow Webdunia tamil