புகழையும், பொழுதையும் எப்படி பணமாக்குவது என்று நடிகைகளுக்கு தெரிந்திருக்கிறது. ஆறுமாதம் நடித்து சம்பாதிப்பதை ஆறே நாள் விளம்பரத்தில் சம்பாதிப்பதை ஆறே நாள் விளம்பரத்தில் சம்பாதிக்கிறார்கள். அசினும், த்ரிஷாவும்தான் இதில் முன்னணி.
ஆந்திராவில் செல்போன் சில்லறை வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் பிக்சி. இதன் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கிறார் த்ரிஷா. ஏற்கனவே குளிர்பானம் முதல் ஸ்கூட்டி வரை பல நிறுவனங்களுக்கு அம்பாசிடராக இவர் இருந்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டவர், பிக்சி மாதிரியான ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பது பெருமை என்றார். பெருமையுடன் பெரும் பணமும் த்ரிஷாவுக்கு கிடைத்திருக்கிறது.
முதல் விஷயத்தை குறிப்பிட்டவர், இரண்டாவதை மறந்து விட்டார். இன்கம்டாக்ஸ் பயமோ?