தங்கம் படத்துக்குப் பிறகு மீண்டும் லைம் லைட்டில் கவுண்டமணி, கையில் கரன்சியுடன் கவுண்டரின் கால்ஷீட்டுக்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது. கவுண்டமணி மாறவில்லை. ஹீரோவுக்கு இணையான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.
அப்படி கவுண்டர் தேர்வு செய்த படம் பார்க்கலாம் பழகலாம். ஜாதி மோதலால் காதல் ஜோடி ஒன்று பாதிக்கப்படுவது கதை. ஏ.எம். பாஸ்கர் என்பவர் படத்தை இயக்குகிறார். பாதிக்கப்படும் காதல் ஜோடியாக நடிப்பவர்கள் ஜெய் ஆகாஷ், மிதுனா.
காதல் ஜோடியை விட கவுண்டமணியின் காமெடியை நம்பிதான் படமே தயாராகிறது.
ஜி.எம். நிர்மல்ராஜ் என்பவரின் மேக்ராம் புரடெக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.