விந்தியா நடித்த அழகு நிலையம் படம் நினைவிருக்கிறதா? இருந்தால் உங்கள் மெமரி டபுள் ஸ்ட்ராங்க்! பெட்டிக்குள் பல வருடங்களாகக் கிடந்த அழகு நிலையம் விரைவில் வெளிவர இருக்கிறது.
மார்க்கெட் டல்லான நேரம், நடிப்பை ஓரமாக ஒதுக்கி வைத்து, கவர்ச்சி காக்டெயிலுடன் விந்தியா களமிறங்கிய படம் அழகு நிலையம். யோகா டீச்சராக ஒரு போக விளையாட்டே நடத்தியிருக்கிறார் இதில். கூடவே சொர்ணமால்யாவும் உண்டு.
ராஜாஜி இயக்கிய இந்தப் படத்தை தூசு தட்டி வெளியிடுகிறது இன்சைட் மீடியா. கல்யாணமாகி கணவன், குடும்பம் என செட்டிலான விந்தியாவுக்கு அழகு நிலையத்தின் வரவு அவ்வளவு உவப்பாக இல்லை.
முற்பகல் செய்வதுதானே பிற்பகலில் விளையும்!