மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது. வாய்ப்புகள் குறைந்தாலும் கவுண்டமணியின் வீராப்பு மட்டும் ஒரு விள்ளல் குறையாமல் அப்படியே இருக்கிறது.
குசேலனில் வடிவேலு நடிக்கம் கேரக்டரில் நடிக்க முதலில் கவுண்டமணியைத்தான் அணுகியிருக்கிறார் பி.வாசு. இவரது மன்னன் படத்தில் ரஜினியுடன் கவுண்டமணி அடித்த லூட்டி ஊட்டி குளிராக இன்னும் ஜில்லென்று இருக்கிறது.
ஆனால் கவுண்டரோ, முடியாது என மறுத்திருக்கிறார். பி. வாசு சந்திரமுகியிலும், தொட்டால் பூ மலரும் படத்திலும் கவுண்டரை கண்டுகொள்ளாததால், அவருக்கு கோபம். மற்ற நடிகர்கள் ரஜினி படத்தில் நடிக்க கஜினி மாதிரி தொடர்ந்து படையெடுப்பு நடத்திக் கொண்டிருக்க, தேடி வந்த வாய்ப்பையும் உதறித் தள்ளியிருக்கிறார் கவுண்டர்.
கொம்பு இளைத்தாலும் இந்த மாடு மட்டும் இளைக்காது.