வெள்ளித்திரை படத்தை டூயட் மூவிசுடன் இணைந்து தயாரித்த மோசர் பேர் மேலும் சில படங்களை தயாரிக்கிறது. முதல் படம் சசியின் பூ. ஸ்ரீகாந்த் நடிக்கும் பூவின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. அடுத்து அறிமுக இயக்குனர் மீரா கதிவரனின் என் பெர் தமிழரசி.
இதனையடுத்து ஜப் வி மெட் படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறது மோசர் பேர். தனுஷ்- த்ரிஷாவை இதில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
வினய் நடிக்கும் மோதி விளையாடு படத்தை இயக்கும் சரண், மோசர் பேருக்காக ஒரு படம் இயக்குகிறார். அனேகமாக அது ஜப் வி மெட் டின் தமிழ் ரீ-மேக்காக இருக்கலாம்.
முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.ஸை வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.ஸாக வெற்றிகரமாக ரீ-மேக் செய்தவர் சரண் என்பது குறிப்பிடத்தக்கது.