சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்த கஞ்சா கருப்பும், இயக்குனர் ஷக்தி சிதம்பரமும் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
ஷக்தி சிதம்பரம் தனது சண்ட படத்தில் நடிக்க கஞ்சா கருப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், சண்டயில் கஞ்சா கருப்பு நடிக்கவில்லை. அவர் கால்ஷீட் கொடுத்தும் ஷக்தி சிதம்பரம் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை என கூறுகிறார்கள்.
இந்நிலையில் ஏவி.எம்.ஸ்டூடியோவில் கஞ்சா கருப்பை சந்தித்த ஷக்தி சிதம்பரம் அட்வான்ஸை திருப்பி கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து இருவரும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
கஞ்சா கருப்பு நடிகர் சங்கத்திலும், ஷக்தி சிதம்பரம் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் இந்த மோதல் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.