கரண்ட்டை பிடித்ததுபோல் கலங்கிப் போயிருக்கிறது கலையுலகம். எல்லாம் நடிகை ஃபுளோரா கைதால் உருவான பிரச்சினை.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு ஆள்கடத்த முயன்று அமெரிக்க தூதரகத்திடம் மாட்டிக்கொண்டார் புளோரா. இதனைத் தொடர்நது சந்தேகத்திற்குரிய 200 நடிகர், நடிகை, இயக்குனர்கள் அமெரிக்கா செல்ல ஆயுட்கால தடைவிதித்தது அமெரிக்க தூதரகம்.
அந்த 200 பேர் யார் என்பதை தூதரக அதிகாரிகள் வெளியிடவில்லை. இதனால் மொத்த கலையுலகமே கலகக்கத்தில் உள்ளது. பலரும் தூதரகத்திற்கு போன் செய்து பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் தனது ஹிட்லிஸ்டை தூதரகம் அளித்துள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயர்கள் என்பதால் விசாரணையை ரகசியமாகவே நடத்துகிறார் கமிஷனர்.
சிரிப்பு நடிகர் ஒருவர்தான் முதலில் சிக்குவார் என்பதான ஹாஸ்யங்கள் இப்போதே புகைபோல கிளம்புவதால் கிலியாகி கிடக்கிறது கோடம்பாக்கம்.