வியாபார விஷயத்தில் விழிப்போடு இருக்கிறார்கள். வாரணம் ஆயிரம் படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் ஒருநிமிட ட்ரெயிலர் ஒன்றை தயார் செய்திருக்கிறார்கள். முக்கியமானவர்களக்கு திரையிட்டு படத்தின் பிஸினசை பூஸ்ட் செய்யவே இந்த ஏற்பாடு.
டெல்லியில் நடந்த படப்பிடிப்பு முடிந்து, அடுத்த ஷெட்யூல்டை சென்னையில் தொடங்கியிருக்கிறார் கவுதம். ராணுவ அதிகாரியாக நடிப்பதற்கு ஸ்பெஷல் பயிற்சி எடுத்திருக்கிறார் சூர்யா. ரத்னவேலின் ஒளிப்பதிவு, ஹாரிஸின் இசை என அமர்க்களமாக வந்திருக்கிறதாம் படம்.
சூர்யாவின் மார்க்கெட் வேல்யூவையும் தாண்டி செலவழித்துள்ளார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். எல்லாவற்றையும் கடந்து காக்க காக்க போல் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்கிறார்கள் ட்ரெயிலரை பார்த்தவர்கள்.