விஜயகாந்தின் 150-வது படம் அரசாங்கம். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். மதுர படத்தை இயக்கிய மாதேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
தமிழ் திரை வரலாற்றில் 100-வது படம் மிகப்பரிய வெற்றிப்படமாக அமைந்த இரண்டே நடிகர்கள் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த். ரஜினி, கமலின் 100-வது படங்களான ராகவேந்திராவும், ராஜபார்வையும் முறையே கமர்ஷியலாக தோல்வி அடைந்தவை. விஜயகாந்தின் நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட்.
150-வது படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை, லட்சியம். பல நாடுகளுக்கு சென்று சர்வதேச குற்றவாளிகளை பிடித்து, இரண்டு நாயகிகளுடன் டூயூட் பாடி ஓரளவு படத்தை தேற்றி வைத்திருக்கிறார். படம் கமர்ஷியலாக தேறுமா என்பது ஏப்ரல் பதினொன்று தெரிந்து விடும் அன்று அரசாங்கம் திரைக்கு வருகிறது.
ஆக் ஷன் படம் என்றாலும் யு சான்றிதழ் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கிறார் மாதேஷ்.