வெளிநாட்டில் பாடல் காட்சி எடுக்காமல் எந்தத் தமிழ்ப் படமும் முழுமை பெறுவதில்லை. விஷாலின் சத்யம் மட்டும் விதிவிலக்கா என்ன! சத்யத்திற்காக விஷாலும் வெளிநாடு போகிறார்.
விஷால், நயன்தாரா டூயட்டுக்காக இயக்குனர் ராஜசேகர் தேர்வு செய்திருக்கும் வெளிநாடு துருக்கி. இங்கு விஷால், நயன்தாரா நடிக்கும் ஒரு பாடல் காட்சியை ஷ¥ட் செய்கிறார்கள். சத்யத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
சத்யம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தெலுங்கில் சத்யத்தின் பெயர் சல்யூட்!