குசேலனில் விவேக் நடிப்பதாகத்தான் இருந்தது. ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களால் கால்ஷீட் பிரச்சனை. வடிவேலுக்கு அடித்தது அதிர்ஷ்டம்!
கதபறயும் போள் படத்தில் சீனிவாசனின் கடைக்கு எதிரே போட்டியாக சலூன் நடத்துகிறவராக வருவார் ஜெகதீஷ். தமிழில் இந்தக் கேரக்டரில்தான் நடிக்கிறார் வடிவேலு. பசுபதியின் கடைக்கு எதிரே சலூன் நடத்தும் போட்டியாளர்.
மலையாளத்தில் சிறிதளவே வரும் இந்தக் கேரக்டரை வடிவேலுக்காக படம் முழுவதும் வரும்படி பெரிதாக்கியிருக்கிறார்கள்.
சந்திரமுகியின் வெற்றியில் வடிவேலுவிற்கும் கணிசமான பங்குண்டு என்று ரஜினியும், பி. வாசுவும் நம்புவதால்தான் இந்த மாற்றம்.
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தப் பிறகும், இந்த முக்கியத்துவம் கிடைத்திருப்பது ஆச்சரியம்.
யானை இளைத்தாலும் குதிரை மட்டம்!