கருணாஸும் ஹீரோவாகிறார். உபயம், குசேலன் புகழ் சீனிவாசனின் மலையாளப் படம் வடக்கு நோக்கு எந்திரம்.
பார்வதியுடன் சீனிவாசன் நடித்த வடக்கு நோக்கு எந்திரம், மனைவியை சந்தேகிக்கும் கணவனைப் பற்றியது. இதன் ரீ-மேக்கில் சந்தேகக் கணவனாக சீனிவாசன் ஏற்று நடித்த வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். கதாநாயகனாக நடிப்பது உறுதியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை படத்தை இயக்க சரியான ஆள் கிடைக்காமல் இருந்தது.
இப்போது அவரும் அகப்பட்டுவிட்டார். புலி வருது படத்தை இயக்கிய ஜி.வி. குமார் தான் அவர். சீரியஸ் கதையையே சிரிக்கச் சிரிக்க எடுப்பவர் ஜி.வி. குமார். அதனால்தான் கருணாஸ் படத்துக்கு செலக்ட் ஆகியிருக்கிறார்.
சரி தயாரிப்பாளர் யார், பாலாவா?