கதிரேசன் தயாரிப்பில் தனுஷ், ஸ்ரேயா நடிக்கும் படம் குறித்து பல தகவல்கள். 'பொல்லாதவன்' படத்தை இயக்கிய வெற்றிமாறனே இதனையும் இயக்குகிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை ஜி.வி.பிரகாஷ் என அதே டீம்.
மதுரையில் படத்தின் டிஸ்கஷன் நடந்து வருகிறது. படத்தின் கதையும் மதுரையில் நடப்பதுபோலவே உருவாக்கப்பட்டுள்ளது. 1970ல் நடக்கும் கதையிது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில் பெருவாரியாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினரைப் பற்றியதாம் இந்தக் கதை. சென்ஸிடிவ்வான சப்ஜெட் என்பதால் கதையை சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
1970ல் நடக்கும் கதைக்கு கதைகளின் ரொம்ப முக்கியம். அதனால், கதைக்கேற்ற லொகேஷனைப் பார்த்து, அந்த இடத்தை மனதில் கொண்டே திரைக்கதையை உருவாக்குகிறாராம் வெற்றிமாறன்.
படத்துக்கு சேவல் என்று பெயர் வைக்க நினைத்து, இயக்குனர் ஹரி முந்திக் கொண்டதால் வேறு பெயர் தேடி வருகிறார்கள்.