சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிக்கும் 'யோகி' தாதாக்கள் கதை. சென்னை குப்பத்து தாதாக்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் கொண்டு வர இருக்கிறார்கள். இதில் தாதாவாக நடிக்கிறார் அமீர்.
படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடம் ஒன்று வருகிறது. யதார்த்த விரும்பியான அமீருக்கு நிஜப் போலீஸை அதில் நடிக்க வைக்க ஆசை. உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக இருக்கும் ஜாஃபர் சேட்டுக்கு கடிதம் எழுதினார்.
ஜாஃபர் சேட் தாதாக்களுக்கு சிம்மச் சொப்பணம். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். முட்டை ரவி, மணல்மேடு சங்கர் போன்ற படா ரவுடிகளை என்கவுண்டரில் பட்டென்று போட்டவர்.
உளவுத்துறைப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் இவருக்கு துப்பாக்கி ஷூட்டிங் பிடித்த அளவுக்கு சினிமா ஷூட்டிங் பிடிக்காது போல.
இதுவரை பாஸிடிவ்வான பதில் ஏதும் அமீருக்கு கொடுக்கவில்லையாம் இவர்.