நடிகர் பிரசாந்தை ரசிகர்கள் சிறிது சிறிதாக மறந்து வருகிறார்கள். முழுவதும் மறந்து போகும் முன் ஏதாவது படம் வரவேண்டுமே?
வருகிறது! பிரசாந்தின் தந்தை தியாகராஜனே படத்தை இயக்குகிறார். படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ராஜசேகர் இயக்கத்தில் தியாகராஜன் நடிப்பில் வெளிவந்த 'மலையூர் மம்பட்டியான்' படம் ரீ-மேக் செய்யப்படுகிறது. தியாகராஜனே ரீ-மேக் செய்கிறார். டைரக்ஷனும் அவரே! ஹீரோ... வேறு யார், பிரசாந்த் தான்!
மேற்குலகில் பிரபலமான ராபின் ஹ¥ட் கதைதான் மலையூர் மம்பட்டியான். அன்று சூப்பர் ஹிட்டான படம், இன்றும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் வரும் 19 ஆம் தேதி படத்தை ஆரம்பிக்கிறார் தியாகராஜன்.
பிரசாந்த் நடித்த செல்வமணியின் புலன் விசாரணை-II படத்தை வெளியிடவும் முயற்சிகள் நடந்து வருகிறது.