பூஜை இல்லை, போஸ்டர் இல்லை, ஏன் படத்துகூகு பெயர் கூட வைக்காமல் ஷூட்டிங் கிளம்பிச் சென்று முப்பதே நாளில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு வந்திருக்கிறார் விஜய், கிரீடம் படத்தை இயக்கியவர்.
வானம் வசப்படும் கார்த்திக், நாசர், நெடுமுடி வேணு நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குனர் பிரியதர்ஷன், யு.டி.வி. நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு.
இந்திப் படம் Khosla Ka Khosla படத்தின் ரீ-மேக்கான இதில் பியா என்ற இந்தி மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார். மொத்தப் படத்தையும் முடித்து வந்து, பொய் சொல்லப் போறோம் என படத்துக்குப் பெயர் வைத்துள்ளனர்.
ஏப்ரலில் பொய் சொல்லப் போறோம் ரிலீஸாகிறது.