ஃபிலிம் இல்லாமல் படம் எடுத்தாலும் 'பன்ச்' டயலாக் இல்லாமல் பேரரசுவால் படம் இயக்க முடியாது. பன்சும் இவரும் நகமும் சதையும் போல!
அந்த பன்சே இவருக்கு பிரச்சனையாகியிருக்கிறது.
பேரரசுவின் பழனியில் கேட்க முடியாத அளவுக்கு பன்ச் வசனங்கள் இருக்க, பத்திரிக்கை விளம்பரங்களிலும் எதுகை மோனையில் வெளுத்து வாங்குகிறார் பேரரசு.
கட் அடிக்கிறதும், பிட் அடிக்கிறதும் பசங்களோட வேலை. ஹிட் கொடுப்பது பழனியோட வேலை! பத்திரிக்கையில் வந்த இந்த பன்ச் மாணவர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியிருக்கிறது. மாணவர்கள் என்றால் கட் அடிப்பவர்களும், பிட் அடிப்பவர்களுமா என பேரரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பு.
பிரச்சனை கிடைக்குமா போராட்டாம் நடத்த என்று காத்திருந்த சில இந்து அமைப்புகளும் பேரரசுவின் பன்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாதி திரையரங்குகளிலிருந்து பழனியை தூக்கிவிட்டதால், பன்ச் பிரச்சனை பெரிதாகவில்லை.