அரசியலில் நுழைய அடிபோடுகிறாரா விஜய்? அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அப்படித்தான் எண்ண வைக்கிறது!
ரசிர்களை சந்திப்பது, போகிற இடமெல்லாம் பொதுக்கூட்டம் போடுவது என இளைய தளபதியின் மக்கள் சந்திப்பு சமீப காலத்தில் உச்சம் பெற்றிருக்கிறது. சேலத்தில் குருவி படப்பிடிப்பில் இருப்பவர் இந்த மாதம் 24 ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும் தனது மன்ற விழாவில் கலந்து கொள்கிறார். ஈரோடு சி.எஸ்.டி. பள்ளி வளாகத்தில் இந்த விழா நடக்கிறது.
ஊனமுற்றோருக்கு மூன்று சக்கரவண்டி, அரசு பள்ளிகளுக்கு இலவச கணினிகள் இந்த விழாவில் வழங்கப்படவுள்ளன.
அதைவிட முக்கியமான அம்சம், தமிழக அமைச்சர் ராஜா, எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஈரோடு மேயர் முருகேசன் என ஈரோட்டின் ஒட்டுமொத்த ஆளும் கட்சி வி.ஐ.பி.களும் மன்ற விழாவில் ஆஜராகிறார்கள்.
மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி குருவி படத்தை தயாரிப்பதால்தான், விஜயின் மன்ற விழாவிற்கு தி.மு.க. வி.ஐ.பி.கள் ஆதரவு தருவதாகச் சொல்லப்படுகிறது.