காமெடியனாக நடிப்பாரா அல்லது ஹீரோவாக மட்டும் தொடர்வாரா என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வடிவேலு. இந்திரலோகம் சரியாக போகாத விரக்தியில் இருந்தவர் பழைய சுறுசுறுப்புடன் காமெடி பாதைக்கு திரும்பியிருக்கிறார்.
முதல்கட்டமாக திருமுருகனின் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடிக்கிறார். எம் மகன் போலவே இதிலும் குணச்சித்திரம் கலந்த காமெடி வேடம்.
இதனைத் தொடர்ந்து அர்ஜுனின் துரையில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். அர்ஜுன் - வடிவேலு காம்பினேஷன் இதுவரை தோல்வி கண்டதில்லை.
இந்த இரு படங்களும் தனது நீண்ட இடைவெளியே பூர்த்தி செய்யும் என நம்புகிறார் வைகை புயல்!