தமிழ் சினிமாவில் மேலும் ஒரு வாரிசு நடிகர். பெயர் விகாஷ். நடன இயக்குநர் ஜான் பாபுவின் மகன்.
ஒத்த ரூபா பாடலுக்கு குஷ்புவுடன் கரகம் ஆடிய ஜான் பாபு, தனது மகனை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். எஸ்.ஜே. சூர்யா, ராகவேந்திர ராவ் போன்றவர்களிடம் பணியாற்றிய சரவணகிருஷ்ணா, விகாஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
2007- ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற நடாஷா சூரியின் தங்கை சோனியா, விகாஷின் ஜோடியாக நடிக்கிறார்.
எல்லா வாரிசு நடிகர்களைப் போல நடிப்பு, சண்டை, நடனம் என சினிமாவுக்குத் தேவையான அனைத்தையும் முறைப்படி கற்றுத் தேர்ந்திருக்கிறார் விகாஷ்.
படத்திற்கு நேசி என்று பெயர் வைத்துள்ளனர்.