Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலைபோன மூன்று முகம் ரீ-மேக் உரிமை!

Advertiesment
விலைபோன மூன்று முகம் ரீ-மேக் உரிமை!
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (17:38 IST)
விக்ரமுக்கு ரஜினியின் மூன்று முகம் படத்தின் மீது ஓர் ஆர்வம். எந்த ரீ-மேக் படத்தில் நடிக்க விருப்பம் என்று கேட்டதற்கு மூன்று முகம் என்றார் சீயான்.

சத்யா மூவிஸ் தயாரித்த மூன்று முகம் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கியிருக்கிறார் பொல்லாதவன் தயாரிப்பாளர் கதிரேசன். பொல்லாதவன் படத்தை தயாரிக்கும் முன்பே மூன்று முகம் ரி-மேக் உரிமையை அவர் வழங்கியுள்ளார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரேயா நடிக்கும் படத்தை கதிரேசனின் குரூப் கம்பெனி தயாரித்து வருகிறது. விக்ரம் அல்லது அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால் தனுஷ் படம் முடிந்த பிறகு மூன்று முகம் ரீ-மேக்கை தயாரிக்கும் எண்ணம் கதிரேசனுக்கு இருக்கிறது.

விக்ரம் அல்லது அஜித்தின் கால்ஷீட் கிடைக்கும் வரை அவர் காத்திருக்கவும் தயார். மூன்று முகம் நிச்சயம் வெற்றி பெறும் கதை என்பதால்தான் இந்த காத்திருப்பு.

Share this Story:

Follow Webdunia tamil