முழுமையாக தயாராகும் முன் முதல்வர் கருணாநிதி பார்த்த ஒரேபடம் இளவேனிலின் உளியின் ஓசையாகதான் இருக்கும். சரித்திரப் படமான இது முதல்வர் எழுதிய கதையின் அடிப்படையில் உருவாகிறது. வினித், கீர்த்தி சாவ்லா, அக் ஷயா முக்கிய கதாபாரத்திரங்களில் நடித்துள்ளனர்.
150 ஏக்கர் நிலப்பரப்பில் கலை இயக்குனர் மகியின் கை வண்ணத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து உளியின் ஓசையை எடுத்துள்ளனர். முதல்வர் இதில் பாடல் ஒன்றும் எழுதியிருக்கிறார்.
உளியின் ஓசை உருவாக்கத்தில் தனிக் கவனம் செலுத்தும் முதல்வர், மந்திரிகள் புடைசூழ வந்து உளியின் ஓசை படத்தை எடுத்த வரைக்கும் பார்வையிட்டார்.
பார்த்து முடித்ததும், நான் எதிர்பார்த்ததை விட சிறப்பா பண்ணியிருக்கிங்க என இளவேனிலைப் பாராட்டி அவரை பரவசப்படுத்தினார்.
இளையராஜாவின் இசை உளியின் ஓசைக்கு பக்கபலமாக இருக்கும் என்றார் இளவேனில்.