'கஸ்தூரி மான்' படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் தொடர்ந்து பாலாவின் நான் கடவுளுக்கும் வசனம் எழுதினார். இவரது எழுத்தில் உருவாகும் மூன்றாவது படம் அங்காடித் தெரு!
இதன் இயக்குநர் வசந்தபாலனுக்கு இலக்கியப் பரிட்சயம் அதிகம். இவரது முதல் படம் ஆல்பத்துக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருக்கு ஆல்பம் முதல் திரை அனுபவம். 'பீமா', 'தாம் தூம்', எனப் பிஸியாக இருக்கும் ராமகிருஷ்ணனுக்கு சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த வசந்தபாலன், அங்காடித் தெருவின் வசனம் எழுதும் பொறுப்பை ஜெயமோகனிடம் கொடுத்துள்ளார்.
கஸ்தூரிமான் வசனத்தை மூன்று நாளில் எழுதி முடித்தவரான ஜெயமோகன், இரண்டே நாளில் அங்காடித் தெருவின் முதல் பகுதி வசனத்தை எழுதி வசந்தபாலனைத் திணறடித்திருக்கிறார்!