Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வரின் கவனத்தில் உளியின் ஓசை!

Advertiesment
முதல்வரின் கவனத்தில் உளியின் ஓசை!
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (19:49 IST)
உளியின் ஓசை இயக்குனர் இளவேனில் ஓர் எழுத்தாளர். அவர் ஒரு சிறந்த ஓவியர் என்பது பலருக்குத் தெரியாது. மலையூர் மம்பட்டியான் படத்தில் டைட்டிலை எழுதியவரே இவர்தான்.

உளியின் ஓசையின் ஒவ்வொரு அசைவையும் அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து வருகிறார் முதல்வர். தனது கதை என்பதைத் தாண்டி படம் நன்றாக வரவேண்டும் என்ற ஆர்வமே இதற்குக் காரணம்.

ஒரு காட்சி படமாகும் முன் அந்தக் காட்சியின் வசனங்கள் முதல்வரின் பார்வைக்குப் போய் அவரது சின்னச் சின்ன திருத்தங்களுக்குப் பிறகே படமாக்கப்படுகின்றன.

இளவேனிலுக்கு காலத்துக்கு தகுந்தபடி வசனங்கள் சின்னதாக அமைய வேண்டும் என்று விருப்பம். முதல்வருக்கு காவயத் தன்மையுடன் சற்றே நீளமாக இருக்க வேண்டும் என ஆசை. இந்த இரு விருப்பங்களையும் ஈடுசெய்யும்படி உருவாகிறது உளியின் ஓசை.

படம் ரசியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சரிதான்!

Share this Story:

Follow Webdunia tamil