சசியின் புதிய படம் 'பூ' வில் இலக்கிய வாசம் சற்றே தூக்கலாக இருக்கிறது.
இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் சசி. அவரது 'பூ' படத்தின் கதை, எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடையது என்பது தெரியும். 'வெயிலோடு போய்' என்ற அந்தக் கதை, கிராமத்து இளம்பெண்ணின் களங்கமில்லாக் காதலைப் பற்றியது.
கதையை இலக்கியத்தில் இருந்து எடுத்ததோடு இலக்கியவாதி ஒருவரையும் 'பூ' வில் நடிக்க வைக்கிறார் சசி.
பாலகாண்டம் என்ற சிறுகதை தொகுதியின் மூலம் இலக்கியத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த எழுத்தாளர் லட்சுமணப் பெருமாள், 'பூ' வில் முக்கியமானதொரு வேடத்தில் நடிக்கிறார்.
சசியின் இலக்கிய ஈடுபாடே லட்சுமணப் பெருமாளை நடிகராக்கியிருக்கிறது. எஸ்.எஸ்.குமரன் இசையில் ஆறு பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்து விட்டது. விரைவில் 'பூ' வின் இசையை ரசிகர்கள் கேட்கலாம்.