தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ஹேப்பி டேய்ஸ் படத்தை பிரகாஷ்ராஜ் தனது டூயட் மூவிஸ் பேனரில் தயாரிக்கிறார்.
இயக்குனர் சரணின் தம்பி குகன் படத்தை இயக்குகிறார். புதுமுகம் ஒருவரை ஹீரோவாக நடிக்கவைக்க நினைத்து ஏகப்பட்ட பேரை பார்த்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட நூறுபேரை பார்த்து பத்துபேரை செலக்ட் பண்ணியிருக்கிறார்கள்.அவர்கள் அத்தனை பேரையும் தனது ஈ.சி.ஆர். ஃபார்ம் ஹவுஸூக்கு வரவழைத்து பார்ட்டி கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
புதுமுகம் என்பதால் கூச்சத்தோடு இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு காஷூவல் பார்ட்டி நடத்தி அவர்களோடு கலந்துரையாடியிருக்கிறார்.
அவருக்கு தேவையான ஹீரோவை செலக்ட் பண்ணிவிட்டாராம். விரைவில் அறிவிக்க இருக்கிறார். பரீட்சைக்கு போன மாதிரி பதட்டத்தோடு காத்திருக்கிறார்கள் புதுமுகங்கள்.
யாருக்கு அன்றைய தினம் ஹேப்பிடேய்ஸ் என்று தெரியவில்லை!