ஊரெங்கும் சூப்பர் ஸ்டாரின் ரோபோ படம் பற்றிய பேச்சாக இருக்கிறது. அவரோ அதற்கு முன்னால் குறுகிய கால தயாரிப்பாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
மலையாளத்தில் சீனிவாசனும் மோகன்லாலும் நடித்து ஹிட் ஆன படம் கதபறயும் போல். அதை பி.வாசு இயக்கத்தில் ரீமேக் செய்யப் போகிறார்கள்.
சீனிவாசன் கேரக்டரில் பசுபதி நடிக்கிறார். மோகன்லால் கேரக்டரில் ரஜினியை நடிக்கச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ஃபோர்ப்ரேம்ஸ் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று படத்தை தயாரிக்கப்போவது சூப்பர்ஸ்டாரை அறிமுகப்படுத்திய பாலசந்தர். இரண்டு இவரது நிஜ வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிற கதையாம்!