அர்ஜுனுடன் ஆர்யா இணைந்து நடிக்க உள்ள படம் சர்வம். இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
ஏற்கனவே சரண் தயாரிப்பில் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்குவதாக இருந்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
சூர்யாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்போது படத்தை தொடங்கவில்லை. இப்போது பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்வம் படத்துக்கான வேலைகளை தொடங்கிவிட்டார்.
ஹீரோவாக அர்ஜுனும் ஆர்யாவும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஐங்கரன் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது.
ஆர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நான் கடவுள் படம் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. அதன் பிறகு மார்ச் முதல் வாரம் இந்தப்படத்தை தொடங்குகிறார்கள்.