Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொ‌ங்கலு‌க்கு ‌ரி‌லீ‌ஸ் ஆகுமா காளை?

Advertiesment
பொ‌ங்கலு‌க்கு ‌ரி‌லீ‌ஸ் ஆகுமா காளை?
, வெள்ளி, 11 ஜனவரி 2008 (13:15 IST)
சிம்பு நடிக்க நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ள படம் காளை. இந்தப்படம் பொங்கலுக்கு ரிலிஸ் பண்ணுவதென்ற திட்டத்தில் நாலாபக்கமும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் மதுரையில் பிரபலமான பைனான்ஸியர் ஒருவர் தனக்கு பணம் தரவேண்டும் என்று பஞ்சாயத்து பண்ணினார்.

அது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் கூடிப்பேசி பிரச்சினையை முடித்தார்கள். அதற்குள் இன்னொருவர் எனக்கு 90லட்சம் பணம் தரவேண்டும் என்று கோர்ட் படியேறியிருக்கிறார்.

கோர்ட்டும் மூன்று வாரத்துக்கு இடைக்கல தடை விதித்திருக்கிறார். உடனடியாக பணத்தைக் கட்டி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருகிற முயற்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர்.

Share this Story:

Follow Webdunia tamil