சாய்மீரா நிறுவனம் தொடங்கியபிறகு பட தயாரிப்புக்களும் அதிகமாகிவிட்டன.
புதிது புதிதாக தியேட்டர்கள், புதுமுயற்சிகள் என்று களை கட்டிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனத்துக்கு நிர்வாக இயக்குனர் ஸ்வாமிநாதன்.
இவருக்கு அடுத்ததாக பிரமிட் நடராஜன் இருக்கிறார். இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் முழுக்க ஒரு செய்தி பரவிக்கிடக்கிறது.
அதன் தொடர்ச்சியாக சாய்மீராவின் பங்குதாரர் என்பதிலிருந்து நடராஜன் விலகப்போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் இது குறித்து சாய்மீரா வட்டாரத்தில் விசாரித்தால்.. வேண்டாதவர்கள் யாரோ கிளப்பிவிடுகிற வதந்தி என்று மறுக்கிறார்கள்.