Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசியவிருதுக்கு ந‌ிகரான விகடன் விருது!

Advertiesment
தேசியவிருதுக்கு ந‌ிகரான விகடன் விருது!
, புதன், 2 ஜனவரி 2008 (11:44 IST)
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களில் வா‌ழ்க்கையோடு கலந்த ஒரு பத்திரிகை ஆனந்தவிகடன்.

இந்த முறை விகடன் விருது என்ற பெயரில் சினிமா தொடங்கி சகல துறை ஆட்களுக்கும் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள். சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர் என்று பருத்திவீரன் படத்துக்கு மொத்தம் எட்டு விருது கொடுத்திருக்கிறார்கள்.

இது குறித்து யோகி படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் அமீரிடம் கேட்டதற்கு...மக்களின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது ஒரு பத்திரிகை...எந்த சூழ்நிலையிலும் எதற்கும் வளைந்து கொடுக்காமல் 75 ஆண்டுகளுக்கும் அதிகமாக கம்பீரமாக நடைபோடும் விகடன் இத்தனை விருதுகள் கொடுத்து கௌரவித்திருப்பது தேசியவிருதுக்கு இணையான அங்கீகாரம் என்று பெருமிதப்படுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil