பாக்யராஜ் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம் சக்கரகட்டி. இப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே சாந்தனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.
அது எதையும் ஒப்புக்கொள்ளாத பாக்யராஜ் அடுத்து தன்னுடய இயக்கத்தில் தான் மகனை நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
சக்கரகட்டி ரிலீஸாவது தள்ளிக்கொண்டே போவதால் தன்னுடய இயக்கத்தில் உடனடியாக மகனை நடிக்க வைக்கப்போகிறார்.
முதலில் வேறொருவரின் கதையை வாங்கி படம் இயக்குவதாக இருந்தார் பாக்யராஜ். ஆனால் தற்போது தான் இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தையே ரீமேக் செய்து இயக்கப்போகிறார்.
மோசர்பியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கப்போகிறது.