கரு.பழனியப்பன் இயக்கும் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை பிரதானமாக வைத்து எடுத்திருக்கிறார்கள்.
கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் படத்தில் வழக்கமான சினிமாத்தனங்கள் எதுவும் கிடையாது. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.
அதுவும் கதையோடு வருகிற மாண்டேஜ் காட்சியமைப்புகளாக பதிவு செய்திருக்கிறார்கள். அதனால் தொலைகாட்சி சேனல்கள் எதிலும் இப்போது பாடல்களை ஒளிபரப்ப கொடுக்காமல் ரகசியம் காக்கிறார்கள்.
இதேபோல் படமாக்கப்பட்டிருக்கும் இன்னொரு படம் கனகு இயக்கும் பிடிச்சிருக்கு.