வில் படத்தை இயக்குனர் பிரபாகர் முதலில் கள்வனின் காதலி படத்தை தயாரித்த லஷ்மணன் என்பவருக்குதான் இயக்குவதாக இருந்தது.
அதனால் வில் டைட்டிலை அந்த கம்பெனி சார்பாகவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவுசெய்திருக்கிறார். ஆனால் அந்த புராஜெக்ட் கைவிட்டுபோனதால் இப்போது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக அதே வில் என்ற டைட்டிலிலே படத்தை இயக்கி வருகிறார்.
அதற்குள் முன்னால் பதிவு செய்த வில் டைட்டில் காலதாமதமானதால் காலாவதியாகிவிட்டதாம்.
இதனால் நடிகர் அருண்பாண்டியன் தான் தயாரிக்கும் படத்திற்கு வில் என்ற பெயரை வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டார்.
இதனால் இயக்குனர் வில் பெயரை உரிமை கொண்டாட முடியவில்லை. அருண்பாண்டியனும் டைட்டிலை விட்டுக்கொடுக்காததால் வேறு டைட்டிலை தேடி வருகிறார் இயக்குனர் பிரபாகர்.