சிம்பு ஹீரோவாக நடிக்க ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கும் சிலம்பாட்டம் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவிருக்கிறது.
இசையமைப்பாளர் தினாவிடம் பாடல்கள் பிரம்மாதமாக வரவேண்டும் என்று இயக்குனரும் ஹீரோவும் கூடவே உட்கார்ந்து வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிம்பு படம் என்றால் ஒரு ரீமிக்ஸ் பாடல் இல்லை என்றால் எப்படி!
ஏகப்பட்ட விவாதத்துக்கு அப்புறம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா பாடல் ரீமிக்ஸ் செய்து சிம்புவே பாடியிருக்கிறார்.
படத்தில் நடிக்கப்போகும் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்...
நலம்தானா என்று சிலம்பாட்டம் ஹீரோயினதானே கேட்கறீங்க சிம்பு!