முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தமிழ் சினிமாவில் தயாராகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
அதனால் படங்களுக்கு வழக்கமாக வருகிற லைட்மேன்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
இருக்கிற யூனிட் ஆட்களை வைத்து அவுட்டோர் யூனிட்டும் சமாளிக்கப் பார்க்கிறார்கள். அப்படித்தான் அமீர் நடிக்க சுப்ரமண்யசிவா இயக்கும் யோகி படத்துக்கும் போயிருக்கிறார்கள்.
படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் குருதேவ் கேட்கிறபடி ஆட்கள் வேலை செய்யவில்லையாம். இதை கேட்டதற்கு லைட்மேன் திருப்பி சத்தம்போட்டு அடிக்கப்போக பெரிய பிரச்சினையாகிவிட்டது.
கடைசியாக யூனியனில் கூப்பிட்டு இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.