டீம் ஒர்க் புரடக்ஷன் சார்பில் இயக்குனர் அமீர் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் யோகி. இயக்குனர் சுப்ரமண்யசிவாதான் இந்தப்படத்துக்கு இயக்குனர்.
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என்று இருவரை இயக்கிய மூன்று படங்களின் கதையும் வெவ்வேறு தளத்தில் இயங்குகிற மாதிரி படம் எடுத்த அமீர் இந்த முறை முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் படத்தை எடுக்கிறார்.
அதற்கான படப்பிடிப்பு இன்று காலை ஏவி.எம்.ஸ்டுடியோவில் தொடங்கியது. உற்சாகம், ராமேஸ்வரம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த குருதேவ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.